
காதல் என்பது ஒரு அழகான உணர்வு, காதலர்கள் எப்படியாலும் இருக்கலாம் ஆனால் காதல் என்பது புனிதமானது.
*சமீபத்தில் நான் படித்த ஒரு நல்ல கட்டுரை..*
உடைந்த கண்ணாடி உடைந்தது தான். ஒட்டுப் போட்டாலும் கீறலின் அடையாலம் எப்போதும் இருக்கத் தான் செய்யும். உடைந்த கண்ணாடியை தூக்கி எறிந்துவிடுவது உசிதம்." மேற்கண்ட வார்த்தையும் வரிகளும் நேற்றிரவு முழுக்க என்னை நித்திரைகொள்ள விடவில்லை, மனதைக் இக்கேள்வி குடைந்து கொண்டே இருந்தது. "கண்ணாடிகளா உறவுகள் ? ஒருபுறம் பாதரசம் பூசப்பட்ட முகம்பார்க்கும் கண்ணாடிகள் என்று உறவைக்கொண்டால் ஒன்று பொருந்தும் நீங்கள் என்ன செய்கின்றீர்களோ அதையே அதுவும் முன்காட்டும் ஆனாலும் அதிலும் இடம் வலமாய், ஆகவே உறவுகளைக் கண்ணாடிகள் என்றுசொல்வது உண்மைதானா?!!!
"குற்றம்பார்க்கில் சுற்றம் இல்லை" என்கின்ற பழமொழி எனக்கு மிகப் பிடிக்கும் நிறைவான மனிதர்கள் என்று யாரும் இல்லை. 'சமூகவிரோதிகளோ, தீவிரவாதிகளோ இவர்களைத் தள்ளி வைத்துவிடுங்கள் இது விதண்டாவாதத்துக்கான நேரம் அல்ல! நாம் ஒவ்வொருவரும் எங்கள் எங்கள் நிலையில் செய்வது 'சரி" என்றுதான் ஒப்புக்கொள்கின்றோம் அதையே இன்னொருவர் செய்யும் போது அது தப்பாகிவிடும் வேளையில்...நாம் தவறே செய்யாதவர்கள் போன்று 'அதிகாரம்" பண்ண முற்படுகின்றோம். "நீரடித்து நீர் விலகுவதில்லை" என்று சொல்வார்களே உறவுகளும் அப்படித்தான் தான் ஆடா விட்டாலும் தன் சதையாடும் என்று பழமொழிகளை உணர்ந்துதான் சொல்லி வைத்தார்கள். இதைப்பற்றிய சிந்தனையில் இருந்த போது.....
'நித்தியானந்தா சுவாமிகளின் ஒரு சத்சங்கம் இதற்கேற்றது போலவே அமைந்தது....அது கீழ்வருமாறு:
இல்லமும், உள்ளமும் தித்திக்க" என்ற தலைப்பில் தியான சத்சங்கம் நடத்திக்கொண்டிருந்த போது ஒரு மாணவர் கேட்டார் "காதல் என்பது மனிதனுக்கு அவசியமான ஒன்றுதானா? அது இல்லாமல் வாழவே முடியாதா? என்று என்னிடம் கேட்டபோது சொன்னேன். *"*உங்களுக்கே தெரியாமல் உங்களுக்குள் இருக்கும் அளவு கடந்த அன்பை வெளிக்கொண்டுவரும் இனிய நிகழ்வுதான் காதல். உங்களை உங்களுக்கே புரியவைப்பதுதான் உறவு. உங்களை உங்களுக்கே கண்டுபிடித்துத் தருவது. நானா இப்படி மாறிப்போனேன்? எனக்குள்ளா இவ்வளவு ரசிப்புத்தன்மையும் சகிப்புத்தன்மையும் ஒளிந்திருந்தது? என்னால் இன்னொரு மனிதருக்காக தியாகம் செய்ய முடியுமா?** என்று உங்களை வியப்பிற்குள்ளும் ஆச்சரியத்திற்குள்ளும் ஆழ்த்துமளவிற்கு வளர வைப்பதுதான் உறவு, அன்பு காதல் இத உணர்த்துபவர் தான் காதலர். எனக்குள்ளா இவ்வளவு சக்தியும் ஒளிந்திருந்தது? என்னிடமிருந்துதான் இவ்வளவு புத்திசாலித்தனமும் வெளிப்பட்டதா?! எங்கிருந்து இவ்வளவு ஆனந்தமும் ஞானமும் எனக்குக் கிடைத்தது? என உங்களைப் பார்த்து நீங்களே ஆச்சரியப்படுமளவிற்கு உங்களை வளர வைப்பவர் தான் குருநாதர்.
இந்த ஆழ்ந்த உறவைத்தான் காதல் அன்பு, பக்தி என்று சொல்கின்றோம். விழிப்புணர்வோடு செயல்பட ஆரம்பித்தால் உறவுகள் கூட உங்களைத் தியானத்தில் ஆழ்த்தும். துரத்தும் நாயைக் கண்டதும் பயந்து நடுங்கக் கூடிய இளம்பெண்ணாக ஒருவர் வளர்ந்திருக்கலாம். ஆனால் தான் பெற்ற கைக்குழந்தையோடு நடந்து சென்றுகொண்டிருக்கும்போது தன் குழந்தையைத் தாக்க வந்தது புலியாக இருந்தால் கூட அதைக் கையிலிருக்கும் முறத்தைக்கொண்டு துரத்துமளவிற்கு சக்தி வந்துவிடும். இதுதான் உறவு. இதுதான் அன்பு.. மனிதனை வளரச்செய்யும் அன்பு மனிதனுக்குத் தேவையானதுதான்.
சூஃபி ஞானியிடம் குடும்பஸ்தர் ஒருவர் இப்படியொரு கேள்வியைக் கேட்டார்" புதிதாய் மனிதர்களிடம் பழகுவதற்கு அச்சமாக இருக்கிறது. சில நேரங்களில் இந்த அச்சம் உச்சத்திற்குபோய் வீட்டிலிருக்கும் நான்கைந்து நபர்களிடம் மாட்டிக்கொள்வதற்குப் பதிலாக நான்கைந்து செல்லப் பிராணிகளை வாங்கி அவற்றோடு மட்டுமே நிம்மதியாய் வாழ்ந்துவிடலாமா என்றெல்லாம் தோன்றுகின்றது இது சரியா? அதற்கு ஞானி சொன்னார் " மிருகங்களோடு பழகுவது வெகு சுலபம்.
ஏனென்றால் அவை உங்கள் அகங்காரத்தைப்பாதிப்பதில்லை. ஆனால், மனிதர்களோடு பழகும் ஒவ்வொரு நொடியும் உங்களின் அகங்காரத்துக்கு அடி விழுந்துகொண்டே இருக்கும் அகங்காரத்தை விட்டுவிடத் தயாராயில்லாதவருக்குத்தான் தனக்கு மட்டும்தொடர்ந்து அடிவிழுவது போலவே இருக்கும். அகங்காரத்தை விட்டுவிடத் தயாராய் இருக்கும் ஒருவருக்கு மனிதர்களோடு பழகுவதென்பது இனிமை மிகுந்த ஒன்றாக இருக்கும்.
அகங்காரத்தை விட்டுவிடத் தயாராயில்லாதவருக்குத்தான் தனக்கு மட்டும்தொடர்ந்து அடிவிழுவது போலவே இருக்கும். அகங்காரத்தை விட்டுவிடத் தயாராய் இருக்கும் ஒருவருக்கு மனிதர்களோடு பழகுவதென்பது இனிமை மிகுந்த ஒன்றாக இருக்கும். நீங்கள் இப்போது முடிவு செய்ய வேண்டியது மனிதர்களா? மிருகங்களா என்பதல்ல 'அகங்காரத்தை விட்டு விடலாமா இல்லையா என்பதை".... நாம் பல வேதனைகளை மனதில் பிடித்து வைத்துக்கொண்டிருக்கின்றோம் மனதில் பிடித்து வைத்திருக்கும் தேவையில்லாத உணர்வுகளை விட ஆரம்பித்தாலே அகங்காரத்தின் பிடி தளர்ந்துவிடும் .
அகங்காரத்தின் பிடி தளர்ந்து விட்டால் இம்மூன்று அதிசயங்கள் நிகழும்
1. புதுமனிதர்களைப் பார்ப்பதே இனிமையாய் இருக்கும்
2. அவர்களோடு பழகுவதை நினைத்தாலே அது பரவசமாய் இருக்கும்
3.பழக ஆரம்பித்துவிட்டால் அது ஆனந்தமாயிருக்கும்.
என சொல்லி முடித்தார் ஆனந்தமாய் வாழ்ந்த சூஃபி ஞானி.. உறவுகள் கண்ணாடிகள் அல்ல...நாம்தான் கண்ணாடி போல் வெகு சீக்கிரத்தில் ஒரு கல்லுப்பட்டாலே உடைந்து போய் விடுகின்றோம்.
எந்தப்பிரச்சனைக்கும் முதலில் காரணி என்ன என்பதை எண்ணிப் பாருங்கள். அந்தக் காரணத்துக்கு நீங்களே கூட ஒருவராய் இருக்கலாமோ என்று சிந்தியுங்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு பிரச்சனைக்கான தீர்வு மிக எளிதாகக் கிடைத்துவிடும். கோபத்தின் உச்சத்திலோ பிரச்சனையில் சிக்கலிலோ வேதனை மிகுந்த சூழ்நிலையிலோ வார்த்தைகளைக் கொட்டி விடாதீர்கள். அடுத்த மனிதனைக் காயப்படுத்தினாலும் அந்தப் பட படப்பும் துடிப்பும் உங்களை வெகுவாகத் தாக்கும். 'சொல்லப்பட்ட சொல்லுக்கு நீங்களே பொறுப்பு" என்பதை உணருங்கள். உறவுகள் அற்புதமானது. காதல் புனிதமானது. வாழ்க்கை ஆனந்தமானது. உணருங்கள்.உறவை நட்பை அன்பால் மட்டுமே ஆராதியுங்கள்.
படித்ததில் பிடித்தது...
அன்புடன்
விஜய்.....
No comments:
Post a Comment